Ads (728x90)

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு நாளை (30) காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget