Ads (728x90)

கொரோனா பாதித்துள்ள நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கண்டகாடு புனர்வாழ்வு முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அந்நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தடுத்து வைப்பதற்காக வத்தளை, ஹெந்தல லாந்துரு வைத்தியசாலையை இந்நாட்டின் முதலாவது தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு  நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து  ஹெந்தல மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையிலேயே தற்போது கொரோன வைரஸ் வேகமாக பரவி வரும் நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளை மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கண்டகாடு புனர்வாழ்வு முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 






Post a Comment

Recent News

Recent Posts Widget