Ads (728x90)

நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்டு பல இடங்களில் இயங்கவைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது நல்லூர் எல்லைக்குள் இருக்கும் திருநெல்வேலி சந்தைக்கு மக்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் புதன்கிழமை பிரதேச சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதன் காரணமாக அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்போது மக்கள் சந்தைகளில் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வரும்போது மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இதற்கு என்ன செய்வது என நாம் கூடி ஆராய்ந்தோம்.

எமது பிரதேச சபையின் எல்லைக்குள் திருநெல்வேலி பொதுச் சந்தை உள்ளது. இனிவரும் காலங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்போது சந்தையை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

சந்தைக்கு வரும் வீதிகளில் பல இடங்களில் சந்தை வியாபாரத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். மக்கள் சந்தைக்கு வரும் வீதிகளில் உள்ள வியாபாரிகளிடம் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget