கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அமுலாகும்
ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழலை காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்குச்சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவிருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்குச்சட்டம் அமுலாகும் வேளையில், எந்தவொரு மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். ஊடக சேவை, அரிசி விநியோகம் உட்பட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழலை காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment