இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி 307 ஓட்டங்களை குவித்தனர்.
அவிஷ்க பெர்னாண்டோ 29 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 44 ஓட்டங்களையும், குசல் பெரேரா 44 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் அடங்கலாக 55 ஓட்டங்களையும், மெத்தியூஸ் 12 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களையும், திசர பெரேரா 38 ஓட்டங்களையும், ஹசரங்க 16 ஓட்டங்களையும் பெற்றனர்
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுக்களையும், ஹோல்டர் 2 விக்கெட்டுக்களையும், ரோஸ்டன் சேஸ், கிரான் பெல்லார்ட், மற்றும் ஷெல்டன் கோர்ட்ரல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 301 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அணி சார்பில் ஷை ஹோப் 72, எஸ்டபிள்யூ. அம்ரிஸ் 60, என்.பூரன் 50, கிரன் பொலார்ட் 49 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இலங்கையின் பந்துவீச்சில் அஞ்சலோ மத்தியூஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

Post a Comment