Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐ ரோட் திட்டத்தின் கீழ் 128 வீதிகள் 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சீரமைக்கப்படவுள்ளன.

இதன்படி நீர்வேலி கரந்தன் - ஊரெழு வீதி ஐ ரோட் திட்டத்தில் காப்பெட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை நேற்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் நாட்டி வைத்தார்.

4.34 கிலோமீற்றர் நீளமான வீதி காப்பெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது. ஊரெழுவில் இருந்து கரந்தன் சந்தி ஊடாக நீர்வேலி கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணம் -பருத்தித்துறை பிரதான வீதியை இணைக்கும் வீதி வரை புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

கோப்பாய் பிரதேசத்தில் 12 வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 19.99 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன. இதேவேளை 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் மொத்தம் 273.24 கிலோ மீற்றர் நீளமுடைய வீதிகள் இந்தத் திட்டத்தில் சீரமைக்கப்படுகின்றன.

நுணாவில் சரசாலை வீதி, மாமுனை - கட்டைக்காடு வீதி, மந்திகை- தம்பசிட்டி அல்வாய் வீதி, உடுப்பிட்டி - மாலு சந்தி அல்வாய் வீதி, தெல்லிப்பளை திட்டி வீதி, தும்பளை வீதி, பிராம்பத்தை பண்டத்தரிப்பு வீதி, மூளாய் வீதி, பாலவோடை- ஊரி வீதி, ஊரெழு - நீர்வேலி வீதி, பிறவுண் வீதி, இராசாவின்தோட்டம் வீதி, மண்கும்பான் சாட்டி வேலணை வீதி, ஊர்காவற்றுறை சுருவில் சரவணை வீதி ஆகியவற்றிற்கு சீரமைப்புப் பணிகள் நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளதுடன். சீன நிறுவனம் ஒன்று வீதி புனரமைப்பு பணியினை மேற்கொள்ளவுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget