போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது தலைகளில் கருப்பு பட்டிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கோத்தா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? சர்வதேசத்தில் மகளிர் கொண்டாட்டம் எங்களிற்கு கண்ணீர் போராட்டம் , சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் ஏற்று ,இலங்கையின் ஜனநாயகம் தமிழின அழிப்பிலா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள், வர்த்தக சங்கத்தினர் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment