Ads (728x90)

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் இண்டு கொழும்பு பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் நேற்று கூட்டாக கட்சித் தலைமையை சந்தித்து தமது ஆட்சேபனையை தெரிவித்தனர்.

நேற்று பகல் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து அவர்கள் தமது அதிருப்தியை தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ அறிமுகமற்ற அம்பிகா போன்றவர்களை எதற்காக வேட்பாளராக்க வேண்டும். பெண் வேட்பாளர்கள் இருவரும் இதுவரை கட்சி அங்கத்துவத்தையே பெற்றிருக்கவில்லை. தமிழ் மக்களின் போராட்டங்களில் எதில் அம்பிகா பங்கேற்றார் என காரசாரமான பல கேள்விகளை இதன்போது அவர்கள் எழுப்பினர்.

பின்னர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்து தமது அதிருப்தியை அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் நடந்த அசௌகரியமான சூழல் குறித்தும் முறையிட்டனர்.

நிலைமையை சமாளித்த மாவை சேனாதிராசா, மகளிர் அணியினரிடம் மனவருத்தத்தை பதிவுசெய்தார். அத்துடன் வேட்பாளர் தெரிவு இறுதியாகவில்லை. எதிர்வரும் 12ம் திகதி அவர்களது கோரிக்கையை மீளவும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget