
கனடாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாட்டின் பிரதமர் இன்று நள்ளிரவு முதல் கனடா மற்றும் அமெரிக்கா எல்லையில் இருக்கும் அத்தியாவசிய பயணங்களை கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால், அதை கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருகின்றன. இதனால் ஐரோப்பாவில் இருக்கும் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் எல்லையை மூடி வருகின்றன.அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் கனடா 17-வது இடத்தில் உள்ளது. கனடாவில் மட்டும் இந்த வைரஸ் காரணமாக தற்போது வரை 1,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவர் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம், கூட்டம் கூட வேண்டாம், உங்கள் ஆரோக்கியம் தான் முக்கியம், உங்களுக்கு தேவையான அனைத்தும் நிச்சயம் அரசு செய்யும் என்று தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் இருந்தும் பரவுவதால் வெளிநாட்டினர் கண்காணிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் மட்டும் இந்த வைரஸால் 19,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 263 பேர் உயிரிழந்தனர்.இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காகவும், நாட்டின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கனடா மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவும், கனடா-அமெரிக்க இன்று நள்ளிரவு முதல் எல்லையில் உள்ள அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.அதே சமயம்,. நாங்கள் விநியோகச் சங்கிலிக்கு தடையில்லை, எனவே உணவு, எரிபொருள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் எல்லையின் இருபுறமும் சென்றடையுடம், அதே சமயம் பாதுகாப்புக்காக மிகவும் கவனிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment