Ads (728x90)


நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி காலை ஆறு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கு 23ஆம் திகதி காலை ஆறு மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணி தொடக்கம் 24ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget