Ads (728x90)

கோட்டாபய அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், மக்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய சலுகை பாண் விலையை 5 ரூபாவாக குறைத்தமையாகும்.

நல்லாட்சி சிரமங்களை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது என்று ஐ.தே.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

எங்கள் அரசாங்கத்தின் 100 நாட்களை மக்கள் நினைவில் கொள்கிறார்கள். எரிபொருள் விலையை குறைத்தோம். அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. சமுர்த்தி மானியம் இரட்டிப்பாகியது. அத்தியாவசிய பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

எங்களுக்கு என்ன கஷ்டங்கள் இருந்தாலும், பொருட்களின் விலையை கட்டுப்படுத்துதல், சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு காப்பீடு செய்தல் போன்றவற்றில் நாங்கள் ஒரு பெரிய வேலை செய்தோம். அடுத்த ஏப்ரல் வரை அரசாங்க செலவினங்களுக்காக அபிவிருத்தி பணிகள், சம்பளம் மற்றும் கடன்களுக்கு பணம் ஒதுக்க இருந்தோம்.

கட்சியில் எந்த தவறும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியை வரவேற்றது. நாங்கள் வெல்ல தயாராக இருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget