Ads (728x90)

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த 14 பேரில் சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதேசமயம் கிளிநொச்சி, முழுங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கு 2ஆம் கட்ட பரிசோதனையும் கிளிநொச்சி கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களுக்கு முதலாம் கட்டப் பரிசோதனையுமாக இன்று மொத்தமாக 24 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்டிருந்தது.

அவர்களில் 12 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அத்துடன் ஏனைய இருவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 61 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலுமொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பேருவளை – சீனன் கோட்டை மற்றும் பன்னில ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் நேற்றைய தினம் 7 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அந்தப்பகுதிகளிலிருந்து 7 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவ்விரண்டு பகுதிகளிலிருந்து மாத்திரம் 16 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அயல் பகுதிகளுக்கும் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் இரு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன. 

Post a Comment

Recent News

Recent Posts Widget