Ads (728x90)

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சற்று முன்னர் வெளியாகிய தகவலின்படி மேலும் இருவர் யாழில் கொரோனா தொற்றுள்ளவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோயாளிகள் 148 பேரில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நால்வருமே சுவிஸில் இருந்து வந்த பாஸ்டருடன் தொடர்பை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாவது,

இன்று பலாலி பகுதியில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் தொற்றே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இம்மூவரும் குறிப்பிட்ட போதகரோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.

ஆகவே கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget