Ads (728x90)

மருதானை – ஆர்னோல்ட் ரத்னாயக்க மாவத்தையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையில் உள்ள 350 குடும்பங்களைச் சேர்ந்த 1,5 00 பேரைக் கொண்ட பகுதி முடக்கப்பட்டுள்ளது.

மருதானையை சேர்ந்த தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளதாக கொழும்பு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் குறித்த நோயாளி வசித்த தொடர்மாடி குடியிருப்பு உள்ளிட்ட 18 மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய தேவைகள் கொழும்பு மாநகர சபையூடாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோர் அங்கொடை தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், தொற்று ஏற்பட்ட நோயாளிகளுடன் தொடர்புகளை பேணிய 308 பேர் ஏற்கனவே கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget