Ads (728x90)

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கு நேற்றையதினம் அமெரிக்காவில் மட்டும் 1,749 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு பலியானோரின் எண்ணிக்கை14,590 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,134 ஆக பதிவாகியுள்ளதுடன் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை4,25,469 ஆக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்காவை அடுத்து பிரிட்டனில் 938 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 640 பேரும், இத்தாலியில் 542 பேரும், பிரான்ஸில் 541 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை15,04,665 ஆக அதிகாரித்துள்ளதுடன் 87,978 பேர் உயிரிழந்துள்ளனர். 3,19,286 பேர் குணமடைந்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget