Ads (728x90)

பெப்சி தொழிலாளர்கள் சார்பில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்குகிறார்கள்.

இது தொடர்பாக பெப்சி அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோன வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நமது தமிழக மக்களின் துயர் துடைக்கும் விதமாக ராமருக்கு அணில் உதவியதைப்போல் திரைப்பட தொழிலாளர்களின் சார்பில் 10 லட்சம் நிதி வழங்குகிறோம்.

பெப்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் பங்கும் இதில் இருக்கும் விதமாக 25 ஆயிரம் உறுப்பினர்கள் சார்பில் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget