Ads (728x90)

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜாஎல – சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த அறுவர் உள்ளிட்ட 8 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் கொரோனா ஒழிப்புக்கான தீர்மானமிக்கதொரு வாரம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஐந்தாவது வாரத்தில் இருக்கிறோம். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நான்காம், ஐந்தாம் வாரங்களிலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதி, பிரதமர், முப்படையினர் மற்றும் சுகாதார தரப்பினர் முன்னெடுத்த அவசர நடவடிக்கைகளினாலேயே, இந்தளவில் எம்மால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

நான்காவது வாரம் வரை சந்தோசப்படக்கூடிய நிலைமையே இருந்தது. நாங்கள் தற்போது ஐந்தாவது வாரத்தின் இரண்டாவது நாளில் இருக்கின்றோம். ஆகவே  நாம் இந்த வாரத்திலும் பாதுகாப்பாக செயற்படவேண்டும்.

இதேவேளை 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget