Ads (728x90)

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வீதிகளில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களையும் பொது மக்கள் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுவருகின்றனர்.

ஊரடங்குச் சட்டத்தின் போது, பொலிஸ் அனுமதியுடன் வீதிகளில் பயணிக்கும் அனைவரும் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தாலும் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தும் உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்..




Post a Comment

Recent News

Recent Posts Widget