Ads (728x90)

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 3 வரை இந்திய பிரதமர் நரேந்திர மோதி நீடிப்பு செய்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய இந்திய பிரதமர் இந்த 19 நாட்கள் நீடிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், கொரோனா தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.

மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், "உங்களுடைய ஒத்துழைப்பு கொரோனைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவி இருக்கிறது," என்றார்.

ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த அவர் , கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளது என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget