Ads (728x90)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தனர்.

அரசினால் அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினியினால் பாதிக்கப்படாமலிருக்க அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் எனவும், மாவட்டத்தினுடைய அரிசித் தேவையினைப் பூர்த்தி செய்த பின்னரே பிற மாவட்டங்களுக்கு அரிசி விநியோகிக்க வேண்டும் எனவும்,

அரசி கட்டுப்பாட்டு விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் அரிசி ஆலை உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget