Ads (728x90)

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்தற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக பல்கலைக்கழகங்களை 3 கட்டங்களில் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

மே மாதம் 4ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் கல்வி மற்றும் கல்விசார் பணியாளர் சபைக்காக மாத்திரம் திறக்கப்படும்.
தீர்மானிப்பதற்கு அதிகாரம் முழுமையாக அந்தந்த பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு அளிக்கப்படும்.

மே மாதம் 11ஆம் திகதி அந்தந்த கற்கை நெறிகளுக்கான இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகங்களை திறத்தல்.
இதற்கமைவாக, வைத்திய பீட கற்கைநெறியில் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கும், விசேட பட்டக் கற்கை நெறியில் 4ஆவது ஆண்டு மாணவர்களுக்கும் பொதுவான பட்டக் கற்கைநெறியில் மூன்றாவது வருட மாணவர்களுக்கும் என்ற ரீதியில் அந்தந்த கற்கை நெறிகளுக்கான இறுதி வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்.

மே மாதம் 18ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்காக பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்.

இந்த வகையில் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் பொழுது கொரோனா வைரசு தொற்று நிலமையில் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்து கூடிய விரைவில் சுற்றறிக்கையொன்றை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க  மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget