Ads (728x90)

கண்ணுக்கு தெரியாத கொரோனா எனும் மாபெரும் அரக்கனை வீழ்த்துவதற்காக மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவாக தேசமே துணை  நிற்கிறது.

அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரைத்துறையினர் என பலரும் அரசுக்கு நிதியுதவி அளித்து தோள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான முறையில் கொரோனா நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget