Ads (728x90)

மலையாள சினிமாவில் காமெடி கலந்த குணச்சித்திர நடிகர்களில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்றவர் நடிகர் இந்திரன்ஸ். தனது வித்தியாசமான டயலாக் டெலிவரி மற்றும் பாடி லாங்குவேஜால் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை கொண்டவர்..

தமிழில் கூட ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தாரே அவர் தான் இவர். தற்போது கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கேரளாவில் சிறைக்கைதிகளுடன் இணைந்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மாஸ்க் தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இந்திரன்ஸ்.

தற்போதுள்ள சூழலில் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோர்களுக்கும் மாஸ்க் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு தட்டுப்பாடின்றி இவற்றை கிடைக்க வழி செய்யும் விதமாக பல இடங்களில் தற்போது மாஸ்க் தைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. அந்தவகையில் கேரளாவில் உள்ள பூஜப்புரா சிறையில் உள்ள கைதிகளுக்கு மாஸ்க் தைக்கும் வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து அவர்களுடன் சேர்ந்து மாஸ்க் தைக்கும் பணியிலும் ஈடுபட்டார் நடிகர் இந்திரன்ஸ்..

பாதுகாப்பு பணியில் இருப்போருக்கு உதவும் விதமாகவே, மாஸ்க் தைக்கும் பணியை மக்களிடம் ஊக்கப்படுத்தும் முயற்சியில் அரசாங்கத்தின் துணையுடன் இறங்கியுள்ளார் நடிகர் இந்திரன்ஸ். மேலும் வீடுகளில் தையல் மிஷின் வைத்திருப்போர், எப்படி தங்களுக்கும், தேவைப்பட்டால் மற்றவர்களுக்கும் மாஸ்க் தைத்துக்கொள்வது என எளிய முறையில் செய்முறை விளக்கமும் கொடுத்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget