Ads (728x90)

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும்.

உங்கள் ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும்.

ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பித்ருக்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முறைக்கு பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும்.

பிறந்த தேதியில் பிறந்த எண்ணில் அல்லது பிறந்த மாத எண்ணில் அல்லது பிறந்த வருட எண்ணில் அல்லது மொத்த கூட்டு எண்ணில் 2,4,7,8, போன்ற எண்களோடு 1 அல்லது 3 அல்லது 9  போன்ற எண்கள் தொடர்பு  கொண்டால்  அவர்களுக்கு  பித்ரு தோஷம் கண்டிப்பாக இருக்கும் ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது. 

பிதுர் தோஷம் தன்னையும், தன் குடும்பத்தையும், குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும்.

இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது.

ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை. 

இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது. சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. 

Post a Comment

Recent News

Recent Posts Widget