Ads (728x90)

அடுத்தவர்களின் கண்திருஷ்டி உங்கள் மேல் விழாமல் இருக்க நீங்கள்  உங்களுடைய கைகளில் ஒரு வில்வ இலையை எடுத்து செல்ல வேண்டும். வெளியில் சென்று விசேஷங்களில் கலந்து கொண்டு, வீடு திரும்பும்போது வீட்டு வாசலில் நின்று உங்கள் வீட்டு உறுப்பினர் அனைவரையும் வாசலிலேயே நிறுத்தி, உங்கள் கைகளில் இருக்கும் வில்வ இலையை எடுத்து திருஷ்டி சுற்றுவது போல் எல்லோரையும் சுற்றி வீட்டு, வாசலிலேயே அந்த இலையை இரண்டாக கிழித்து போட்டு விட வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில் அடுத்தவர்களின் கண் திருஷ்டியும், வயிற்றெரிச்சலும் கட்டாயமாக உங்களை தாக்காது. நீங்கள் வாங்கிய பொருட்களும் எந்தவித சேதாரமும் இல்லாமல் இருக்கும்.

தினம்தோறும் சோம்பேறித்தனம் பார்க்காமல் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும் இப்படி ஒரு கண்திருஷ்டி ஏற்படும். அவர்கள் கூட தங்கள் கைகளில் ஒரு வில்வ இலையை வைத்துக்கொள்ளலாம். தினம்தோறும் வேலைக்கு சென்று வந்த பிறகு, வீட்டு வாசலில் தங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி, இந்த இலையைக் கிழுத்து வாசலில் போட்டு விடுவதும் நல்ல பலனைத் தரும். கண் திருஷ்டியால் உங்களுடைய வேலைக்கும் எந்தவித பிரச்சினையும் வராது.

Post a Comment

Recent News

Recent Posts Widget