Ads (728x90)

வடமாகாணத்தில் தொற்றா நோய் நிலைமையுடையவர்கள் நோய்நிலை தீவிரமடைகின்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக 1990 என்கின்ற அவசர அம்புலன்ஸ் இலக்கத்தை தொடர்புகொண்டு வைத்தியசாலைக்கு செல்லுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் நிலைமைகள் மற்றும் ஆஸ்மா போன்ற சுவாசத்தொகுதி நோய் உள்ளிட்ட தொற்றா நோய் நிலைமையுடையவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக அம்புலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்படின் அது தொடர்பில் அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நோய் நிலைமைகள் தீவிரமடைந்து அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்ற போதிலும் உரிய நேரத்தில் வைத்தியசாலைகளுக்கு வருகைதராதிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நோயாளர்கள் அம்புலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டதையும் அறிய முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மேற்படி தொற்றா நோய்களுடைய நோயாளர்கள் தமது நோய்நிலை தீவிரமடைகின்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக 1990 என்கின்ற அவசர அம்புலன்ஸ் இலக்கத்தை தொடர்புகொண்டு வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ் அம்புலன்ஸ் சேவையினை பெற்றுக்கொள்வதில் ஏதாவது தடங்கல்கள் அல்லது தாமதங்கள் இருப்பின் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பு இலக்கங்களான 021 222 6666 அல்லது 021 221 7982 உடனடியாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget