Ads (728x90)

கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதில் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்துள்ளது.

இதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் சுகாதாரம், விவசாயம், மற்றும் சுற்றுலா ஆகிய மூன்று துறைகளில் உதவுவதற்காக 22 மில்லியன் யுரோக்களை மானியமாக வழங்கியுள்ளது.

இலங்கையில் தற்போது வரை, மிகக் குறைந்தளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும் எனவும், இலங்கையின் முயற்சியை பாராட்டும் வகையில் நாட்டின் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்நிதி வழங்கப்படுதவாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் பசில் ராஜபக்ஸ தலைமையிலான ஜனாதிபதியின் விசேட செயலணி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget