Ads (728x90)

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசுக்கு, இப்போது அமெரிக்கா அதிக விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. உலகில் சர்வ வல்லமை பெற்று விளங்கும் அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,05,237 ஆக உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிகை 19,666 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பால் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டுள்ள நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

கொரோனாவால் மிகக்கடுமையான பாதிப்பை எதிர்க்கொண்ட இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,468 ஆக உள்ளது. இத்தாலிக்கு அடுத்த படியாக ஸ்பெயினில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் தற்போதைய நிலவரப்படி 16,353 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget