போதைப்பொருளை போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மீள விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளைப் பேணிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர், இரு சார்ஜன் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவருமாவர்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் குறித்த அதிகாரிகளை எதிர்வரும் ஜூலை 08 ஆம் திகதி வரை தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment