வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லைகு்கு இடையிலான பயணிகள் படகு சேவை இன்று ஆரம்பமாகின்றது. கொழும்பு நகரத்தில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை காணி நிரப்பல் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
பத்தரமுல்ல பகுதியிலேயே பெரும்பாலான அரச நிறுவனங்கள் இயங்குவதால் அங்கு செல்லும் மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த படகு சேவையின் மூலம் வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லைக்கு 30 நிமிடத்தில் செல்ல முடியும் என காணி நிரப்பல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
படகு சேவை கட்டணமாக 60 ரூபா அறவிடப்படவுள்ளது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு படகு சேவையில் ஈடுபடவுள்ளது. முதற்கட்டத்தில் 04 படகுகள் சேவையில் ஈடுபடும் எனவும், படகொன்றில் 16 பேர் பயணிக்க முடியும் எனவும் காணி நிரப்பல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment