Ads (728x90)

இலங்கையின் 16 மாவட்டங்களில் கொரோனா அபாயம் காணப்படுவதாகவும், இந்த 16 மாவட்டங்களிலும் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்திருப்பதாவது, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவ, காலி, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி,மாத்தளை, கேகாலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிடப்பட்ட 16 மாவட்டங்களிலும் வசிக்கும் பொதுமக்களை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க செயல்படுமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின செயலாளர் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget