நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து கல்வி அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளில் ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடு தழுவிய ரீதியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூலை 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒருவாரம் விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Post a Comment