அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஐ.சி.சி ஆண்களுக்கான 2020 ஆண்டுக்கான ரி20 உலகக் கிண்ண தொடர், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2021 ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சியின் வணிக துணை நிறுவனமான ஐ.பி.சி சபைக் கூட்டத்தில் அடுத்த மூன்று ஐ.சி.சி ஆண்கள் நிகழ்வுகளுக்கான திகதிகள் தொடர்பில கலந்துரையாடப்பட்டு அதற்கான புதிய திகதிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் எதிர்வரும் மூன்று வருடங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பின்னடைவிலிருந்து அதனை மீட்க சிறந்த வாய்ப்பை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் நிகழ்வுகளுக்கான அட்டவணைகள்:
ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணம் 2021: ஒக்டோபர் - நவம்பர் 2021 - இறுதிப் போட்டி நவம்பர் 14, 2021
ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணம் 2022: ஓக்டோபர் - நவம்பர் 2022 - இறுதிப் போட்டி நவம்பர் 13, 2022
ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2023: ஒக்டோபர் - நவம்பர் 2023 இந்தியாவில் நடைபெறும் - இறுதிப் போட்டி நவம்பர் 26, 2023.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment