கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டிற்கு வரும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர சுகாதார சேவைகள் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் மைக்கல் ரயன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தடுப்பூசி பரிசோதனைகளில் சிறந்த முன்னேற்றம் இருந்தாலும், அது பாதுகாப்பானதாகவும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் விதமாகவும் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னரே சந்தைகளுக்கு அனுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,56,54,428-ஐத் தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,36,475 ஆக அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment