தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 18ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
ஆலய வருடாந்த மகோற்சவத்தில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டது.
ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கைகளைக் கழுவி, மாஸ்க் அணிந்து அடையாள அட்டை அல்லது தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணத்தை பொலிஸாரிடம் காண்பித்த பின்னர் ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கொண்டு வராதவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment