நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான தில் பச்சேரா வெளியான 24 மணி நேரத்தில் 9.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மறைவுக்குப் பிறகு பாலிவுட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அவரது கடைசி திரைப்படமான தில் பச்சேரா கடந்த ஜூலை 24 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இலவசமாக வெளியானது.
அனைவரையும் வியக்கத்தக்க வைக்கும் வகையில் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 9.5 பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருவேளை இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இத்தனை பேர் பார்த்திருந்தால் குறைந்த பட்சம் ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூபாய் என்ற கணக்கில் வைத்தால் கூட 950 கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கும் என அந்த செய்தி கூறுகிறது. இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை அந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment