Ads (728x90)

என்னை சின்னப்பையன் என விமர்சிப்பவர்களுக்கு அதிகாரம் கிடைத்ததும் செயல் மூலம் பதிலடி கொடுப்பேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஹற்றன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது யாரையும் விமர்சிக்கக்கூடாது, குறைகூறும் அரசியலை முன்னெடுக்கக்கூடாது என்ற முடிவை நாம் எடுத்திருந்தோம். திட்டங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம்.
எனினும் எதிரணியினர் விமர்சிப்பதையே பிரச்சாரமாகச் செய்கின்றனர்.

ஜீவன் தொண்டமான் சின்னப் பையன், சின்னத் தம்பி என விமர்சனம் செய்கின்றனர். இதே சின்னப் பையனிடம் அதிகாரத்தை தந்துபாருங்கள். மலையகத்தையே மாற்றிக்காட்டுகிறேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வளர்ந்து முதுகில் குத்திவிட்டு சென்றவர்களுக்கே அவ்வளவு திமிர் இருக்குமானால் ஆறுமுகன் தொண்டமானின் அரவணைப்பில் வளர்ந்த எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.:

ஆயிரம் ரூபாய் என்பது தொழிற்சங்கப் பிரச்சினை. ஆனால் அதனை அரசியல் மயப்படுத்திவிட்டனர். இதனால் எமது ஏனைய பிரச்சினைகள் மறைக்கப்பட்டன. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்த சின்னப் பையனை நம்புகின்றனர். எனவே எமது மக்கள் என்னை நம்பமாட்டார்களா?. நமது சமூகத்துக்கு ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை தரக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷதான் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget