இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் தொடங்கிய மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் வென்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பிரபல பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அவர்கள் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6 பந்து வீச்சாளர்கள் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட் பெற்றுள்ளார் என்பதும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை ஸ்டூவர்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment