இந்நிலையில் இந்தியாவை பின்பற்றி அமெரிக்காவும் சீன செயலிகளை தடை செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்த நிலையில் அதிபர் ட்ரம்ப் அதை உறுதி செய்துள்ளார்.
தற்போது டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய ஆஸ்திரேலியாவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை தடை செய்யுமாறு ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கையை வைத்துள்ளனர். இந்த செயலிகளால் தகவல்கள் திருடப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன செயலிகள் சீனாவிற்கு தகவல்களை திருடி அளிப்பதாக பரவி வரும் புகார்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா கூறுகின்றது.

Post a Comment