Ads (728x90)

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்க வேண்டும் என கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது.

தற்போது நாட்டில் 345 தேசிய பாடசாலைகள் உள்ளதாக செயலணியின் உறுப்பினரான கலாநிதி சுனில் ஜயரத்ன நவரத்ன தெரிவித்துள்ளார். எனினும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு தேசிய பாடசாலை கூட இல்லாதுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
குறித்த ஜனாதிபதி செயலணி, கல்வி நடவடிக்கைகளில் திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு யோசனைத் திட்டங்களை முன்வைத்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget