தாம் முன்னெடுத்து வந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து நாளை 29 ஆம் திகதி முற்பகல் 7.30 மணி முதல் மீண்டும் பணியில் இணையப் போவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா ஒழிப்பு பணி மற்றும் தொற்று நோய் கட்டுப்பாடு தொடர்பான பணிகளிலிருந்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடந்த ஜூலை 17ஆம் திகதியிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
கொவிட்-19 கட்டுப்படுத்தல் தொடர்பான, தேர்தல் வழிகாட்டல் வர்த்தமானியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதில்லை என சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கருத்து வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் அச்சங்கம் கண்டனத்தை வெளியிட்டிருந்ததோடு அதனையும் தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கான காரணமாகத் தெரிவித்திருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment