யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25ஆம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ஆம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 31ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 7ஆம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து வந்த 208 பேருடன் தங்கியிருந்தவர் 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.
மீண்டும் அவர் 25ம் திகதி சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கமைய நேற்று மாலை நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதற்கமைய குறித்த நபர் தங்கியிருந்த விடுதியிலும், தனிமைப்படுத்தல் விடுதியிலும் பணியாற்றிய 4 உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென்ற அடிப்படையில் அவர்கள் அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆகவே யாழ்.போதனா வைத்திசாலையில் உள்ள மற்றவர்களுக்கோ, ஊழியர்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இந்த நோய் பரவும் வேகம் தீவிரமானது என்பதால் நாம் மிக அவதானமாக உள்ளோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment