வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரசு தொற்று அடையாளங் காணப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இக்கைதி கந்தகாட்டில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் இருந்து ஜூன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை விளக்க மறியல் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டவராவார்.
இந்த அடையாளங்காணப்பட்ட நோயாளி மற்றும் இவருடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் பிசிஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் இங்குள்ள 250 கைதிகளில் 174 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment