இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொழில் கற்கைநெறிகள் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை பட்டியலையும் கல்வி அமைச்சின் www.mov.gov.lk இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் தொலைபேசி இலக்கமான 0112787136 மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிய முடியும்.
க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள சகல மாணவர்களும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, தொழில் நுட்ப பாடத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 26 தொழில் நுட்ப பாடங்களில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய தொழில் நுட்ப பாடங்களையும் இதன் ஊடக பெற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அனைத்து கல்வி திணைக்களத்தையும் பிரதிநிதித் துவப்படுத் தும் வகையில், 311 பாடசாலைகளில் தற்போது உயர் தரத் தொழில் நுட்ப பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளன. மேலும் 112 பாடசாலைகளில் தொழில் நுட்ப பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தொழில் நுட்ப பயிற்சியை மேற் கொள்ளும் சகல உயர் தர மாணவர்களுக்கும் தினசரி வருகையின் அடிப்படையில் நாளொன்றுக்கு 500 ருபா கொடுப்பனவுகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment