பிரான்ஸின் பிரதமராக பதவி வகித்த 49 வயதுடைய எட்வர்ட் பிலிப் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் முறையாக செயல்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது.
இதையடுத்து 28 ஆம் திகதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.
இதனால் பிரதமர் எட்வர்ட் பிலிப் நேற்று முன்தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து வைரஸ் பிரச்சினையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட 55 வயதுடைய ஜீன் காஸ்டெக்ஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அறிவித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில் எங்கள் ஆட்சியில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment