கொரோனா தொற்று காலப்பகுதியில் தேர்தல்களை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார நடைமுறைகள் பற்றிய வர்த்தமானியின் தாமதமானது பிரசாரங்கள் நடத்துவதை மிகவும் பாதித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல் வர்த்தமானி இவ்விடயங்களை செயற்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு தேவை. அப்போதுதான் அதிகாரிகள் அவற்றைச் செயற்படுத்த முடியும்.
இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்படக்கூடும். நிச்சயமாக வாக்காளர்களின் எண்ணிக்கையை இது பாதிக்கும்.
இந்த வழிகாட்டுதல்களை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் பிரசாரத்தின் போது யாரும் அவற்றைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
தற்போது நாட்டில் மீண்டும் கொவிட்-19 தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடுவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment