அக்ரஹார காப்புறுதி பயன்களை இதுவரையில் கொண்டிராத ஓய்வு பெற்ற 06 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி பயன்களை வழங்குவதற்கு பிரதமரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேற்யை தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியக்காரர்களுக்கான அக்ரஹார காப்புறுதி முறைக்கு உள்ளடக்கப்படக்கூடிய நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆ ஓய்வூதியக்காரர்களில் பெரும்பாலானோர் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்றவர்களாக இருப்பதினால் அவர்களையும் அக்ரஹார காப்புறுதி முறைக்குள் உள்வாங்கப்படுவதற்கு வசதிகள் செய்யுமாறு ஓய்வூதியக்காரர்களின் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தற்பொழுது 2016 ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரம் உரித்தாகியுள்ள அக்ரஹார பயன்கள் அந்த தினத்திற்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் கிடைக்கவுள்ளது.
அக்ரகார காப்புறுதி பரிந்துரை முறையின் கீழ் அனைத்து அரச ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்றவர்களுக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் சிறப்பான சுகாதார சேவை வசதிகளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் அரச முக்கிய வைத்தியசாலைகளில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்ட் தொகுதி ஒன்றை முன்னெடுப்பதற்காக பொருத்தமான முறையொன்று வகுக்கப்படவுள்ளது.
அரச சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியகாரர்களுக்கு மத்தியில் ஓய்வூதிய சம்பள முரண்பாடு மேலும் நீடிப்பது அவதானிக்கப்படுவதுடன் இந்த முரண்பாடுகளை சரி செய்வதற்காக பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்குமாறும் தேசிய சம்பள ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment