Ads (728x90)

போர்த்துக்கலின்  பிரபல காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ  ரொனால்டோ லா லிகா (LaLiga), பிரிமீயர் (Premier League), சீரி ஏ (Serie A)  ஆகிய  மூன்று  காற்பந்துத் தொடர்களிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து  சாதனை படைத்துள்ளார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் ‘சீரி ஏ’ கிளப் காற்பந்துப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற  போட்டியில் யுவென்டஸ் (Juventus) அணி 2-1 என்ற கோல் கணக்கில் லாஜியோவை (Lazio) வீழ்த்தியது. யுவென்டஸ் அணியில் இரண்டு கோல்களை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.

இதுவரை 34 ஆட்டங்களில் ஆடியுள்ள யுவென்டஸ் அணி 25 வெற்றி, 5 ட்ரோ, 4 தோல்வி என்று 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந் நிலையில் ‘சீரி ஏ’ போட்டியில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாக 51 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ‘சீரி ஏ’, ‘லா லிகா’, இங்கிலாந்து பிரிமீயர் லீக் ஆகிய மூன்று போட்டிகளில் குறைந்தது 50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget