நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் தொற்று நிலைமையின் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டல காட்சிகள் ஜுலை மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை முன்னெடுப்பதற்காக அனைத்து காட்சிகளும் வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களை மாத்திரம் அனுமதிக்கும் வகையில் காட்சிகள் நடைபெறும் என்று உயர் கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேராவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment