எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை நியமனத்தின் போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு இணையாக இராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகளையும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இதன் மூலம் இராஜாங்க அமைச்சர்களின் துறைகளில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எந்த வகையிலும் தலையிடவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான துறைகள் சரியாக ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட துறைக்கு தாம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் எனக் கூறி அவர்கள் தலையீடுகளை மேற்கொண்டதால் பல நிர்வாக பிரச்சினைகள் ஏற்பட்டன.
புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் போது தற்போது சிதறிக் கிடக்கும் துறைகளை ஒன்றாக இணைத்து பல அமைச்சுக்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எடுத்துகாட்டாக கல்வி, உயர்கல்வி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி ஆகிய துறைகள் ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும்.
இதன் மூலம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் துறைகளில் இருக்கும் பிரிவுகள் பல இராஜாங்க அமைச்சர்களுக்கு பகிரப்பட உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment